×

கொரோனா 2வது அலை தீவிரம் : 64000 படுக்கைகளுடன், 4000 தனிமை சிகிச்சைப் பெட்டிகளை தயார் செய்தது இந்திய ரயில்வே

டெல்லி : கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்தில் நாட்டின் செயல் திறனை வலுப்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம், தனது பல முன்முயற்சிகளுள் 64000 படுக்கைகளுடன் 4000 தனிமைப்படுத்தும் பெட்டிகளை தயார் செய்துள்ளது.இந்தப் பெட்டிகள், தேவைக்கு ஏற்ப சுலபமாக பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரும் வசதிக் கொண்டவை.அந்தவகையில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது 2990 படுக்கைகளுடன் 191 பெட்டிகள் கோவிட் சிகிச்சைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.தற்போது, இந்தப் பெட்டிகள் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாநிலங்களில் தற்போது 61 கோவிட் நோயாளிகள் இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கூடுதலாக 2929 படுக்கைகள் இங்கு இருப்பு உள்ளன.உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு கோரிக்கை ஏதும் முன்வைக்காத நிலையிலும்,  ஃபைசாபாத், பதோஹி,  வாரணாசி, பரேலி, நசீபாபாத் ஆகிய பெருநகரங்களில் மொத்தம் 800 படுக்கைகளுடன் தலா 10 பெட்டிகள் (மொத்தம் 50 பெட்டிகள்)  நிறுத்திவைக்கப்பட்டுள்ளன….

The post கொரோனா 2வது அலை தீவிரம் : 64000 படுக்கைகளுடன், 4000 தனிமை சிகிச்சைப் பெட்டிகளை தயார் செய்தது இந்திய ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Corona 2nd wave intensity ,Indian Railways ,Delhi ,covid ,Ministry of Railways ,Dinakaran ,
× RELATED பொன்மலை பணிமனையில் ரயில்வே...